search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி டிரம்ப்"

    பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். #DonaldTrump #JackDorsey #Twitter
    வாஷிங்டன்:

    உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (பாலோயர்) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், டுவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.



    மேலும், டுவிட்டர் நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

    இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டுவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   #DonaldTrump #JackDorsey #Twitter 
    அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump #Nuclear
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம். அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும். அணு ஆயுதங்களை கொண்டு விளையாட விரும்புகிற சீனா, ரஷியா உள்ளிட்ட எவருக்கும் விடப்படுகிற அச்சுறுத்தலாக இது அமைகிறது” என்று கூறினார்.

    நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுடன் கையெழுத்து போட்ட ரஷிய அதிபர் மிக்கேல் கார்பச்சேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

    அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவு, அணு ஆயுதங்களை கை விட வேண்டும் என்ற முடிவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று எச்சரித்தார்.

    டிரம்பின் முடிவு வருந்தத்தக்கது என்று ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, ரஷியாவை தனது சொந்த பாதுகாப்பை பார்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.  #DonaldTrump #Nuclear
    ×